Showing posts with label கோ.புண்ணியவான் கவிதைகள். Show all posts
Showing posts with label கோ.புண்ணியவான் கவிதைகள். Show all posts

Thursday, October 6, 2016

முதலாளித்துவத்தின் முதலீடு வளைந்து போய்விட்ட முதுகெலும்பு - கோ. புண்ணியவான்



மையக்கரு

தொழிலாளர்களின் மாறாத அடிமை வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு இக்கவிதைப் படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்

நூற்றாண்டுகள் பல கடந்தும் அடிமை வாழ்க்கை முறையில் மாற்றம் காணாத நிலையில் தொழிலாளர்கள். முன்னேற்றம் அடையாமல் கொட்ட கொட்ட குனியும் அவல நிலையில் வாழும் தொழிலாளர்களைப் பற்றி கவிஞர் இக்கவிதையின் மூலம் கூற விழைகிறார்.

இன்றைய சூழல்

இந்தியர்கள் பலர் இன்றும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தான்
இருக்கின்றனர். இன்னுமும் தோட்டப்புறங்களில் ரப்பர் மரம் வெட்டும் பணி
செய்யும் ஏழை தொழிலாளர்கள் இருந்தே வருகின்றனர்.
முதலாளிமார்களுக்கு காலதிற்கும் விசுவாசமான அடிமைகள் என்ற 
நிலையான முகமூடியைப் போட்ட வண்ணமே வாழ்ந்து வருகின்றனர்





ஓட்டு - கோ. புண்ணியவான்



மையக்கரு

ஒன்றைப் பகுத்தாராய்ந்து முடிவெடுக்க தவறும் மலேசியத் தமிழர்களை மையமாகக் கொண்டு இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்

நாட்டில் தாய் மொழியின் பயன்பாட்டை பற்றியக் கருத்தினை கவிஞர் இக்கவிதையில் பதிவு செய்துள்ளார். இந்து மதத்தையும் அதன் சமயக் குறிகளையும் அவமதிக்கும் செயல்களைப் பற்றியும் இக்கவிதை எடுத்துரைக்கின்றது. மேலும், மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நடந்த நிகழ்வொன்று மிகத் தெளிவாக இக்கவிதையில் கவிஞரால் கூறப்பட்டுள்ளது ஒரு வரலாற்றுப் பதிவாக விளங்குகின்றது.

இன்றைய சூழல்

இந்தியர்களில் பலர் தங்களின் ஓட்டுகளை சொற்சுவை மயக்கங்களினாலேயே போடுகின்றனர். இன்றும் இந்து கோயில்களில் கடவுள் சிலைகள் உடைக்கப்படும் செய்தியை நாம் கேட்கலாம். மக்களுக்கான பல சலுகைகள் சில பொறுப்பற்ற மேலிடத்தார்களால் சுரண்டப்பட்டே வருகின்றன.



நீ அண்ணாந்து பார் நான் செம்மாந்திருப்பேன் - கோ. புண்ணியவான்




மையக்கரு

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் சுயநலமிக்க முதலாளிமார்கள்.

விமர்சனம்

இக்கவிதை முதாலாளித்துவத்தின் கொடுமைகளைப் பற்றி நன்கு பறைச்சாற்றும் வண்ணம் கவிஞரால் இயற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் இத்தகைய அவலநிலை தங்களின் பிள்ளைகள் தொட்டு தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்ற கருத்தும் இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது. அதாவது, தொழிளாலர்களின் பிள்ளைகளும்கூட இறுதிவரை தொழிலாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முதலாளிமார்களின் எண்ணம்.

இன்றைய சூழல்

முதலாளிமார்களின் சுயநலமிக்க  கொடுமை செயல்கள் பல இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எ.கா :- உள்ளூர் மற்றும் அந்நிய தொழிலாளர்களைக் கொடுமை செய்தல். உட்புறப்பகுதிகளில் பணிப்புரிவோர் இன்றும் முதலாளிகளால் கொடுமை செய்யப்பட்டு வருகின்றனர். ( கல்வியறிவு குறைவு ). வேலைக்கேற்ற ஊதியம் கொடுப்பதில்லை. ( 8 மணி நேர வேலை 12 மணி நேரத்திற்கு நீடிக்கலாம். ஆனால் சம்பளத்தில் பெரிய மாற்றமேதும் இருக்காத நிலை). உழைப்பை திருடும் நிலை. உழைப்புக்கேற்ற அங்கீகாரமும் இல்லை.



விளிம்பு நிலையில் கடவுள் - கோ. புண்ணியவான்



மையக்கரு
மதவெறி (தங்களின் மதத்தைத் தவிர்த்து மற்ற மதங்களைப் புறக்கணித்தல்)

விமர்சனம்
மேற்கண்ட கவிதையானது இரண்டு வெவ்வேறு மதங்களுக்கிடையே
நிகழ்ந்த சர்ச்சையின் வெளிப்பாட்டின் காரணமாகப் பிறந்ததாகும்.
இக்கவிதையின் வழி கடவுள் ஒருவர் என்பதையும் அதை மனதளவில் ஏற்க முன்வராத சில மதவாதிகளால் ஏற்படும் இன்னல்களையும் பற்றி கவிஞர் எடுத்துரைக்கிறார். இரண்டு பக்கமும் இருந்துவந்த கடவுள் இப்போது யார் பக்கமும் போகாமல் இருந்துவிட்டார்.

இன்றைய சூழல்
பினாங்கு, ஈப்போ போன்ற மாநிலங்களின் கோயில் சிலைகளை உடைத்த பிரச்சனை . (ஐ.எஸ் தீவிரவாதம், மதவெறியர்கள்). மதமாற்று பிரச்சாரம் செய்தல். தேவாலயங்கள் மற்றும் பைபிள்களை எரித்தல். மற்ற இனத்தவர்களின் பிரச்சனைகளுக்கு மத சாயம் பூசுதல்.