Showing posts with label ரமணாதேவி கவிதைகள். Show all posts
Showing posts with label ரமணாதேவி கவிதைகள். Show all posts

Wednesday, October 5, 2016

தூய்மைக்கேடு - ரமாணாதேவி த/பெ ஆனந்தன்




கவிதையின் பாடுபொருள்
இக்கவிதையானது  தூய்மைக்கேடு ஏற்படுவதற்கு மனிதர்களின் செயலே காரணமாக அமைகின்றது என்பதனை  மையமாகக் கொண்டுள்ளது.

கவிதையின் விமர்சனம்
சுற்றுப்புறச் சூழல் அசுத்தமடைவதற்கு முழுக்க முழுக்க மனிதர்களின் செயலே காரணம் என்று இக்கவிதையின் மூலம் கவிஞர் கூரியுள்ளார். பொதுவிடங்களில் குப்பைகளை எரிப்பது, அதிகமாக வாகனங்களைப் பயன்படுத்துவது போன்றச் செயல்களைச்  செய்து மனிதர்கள் இப்புவியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், நாம் சுவாசிக்கப் பிரணாவாயுவை அளிக்கும் மரங்களைச் சற்றும் யோசிக்காமல் தங்களுடையப் பயன்பாட்டிற்காக வெட்டுகின்றார்கள். மேலும், உயிருக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட்களைப் புகைத்து பூமியை சேதாரப்படுத்துகின்றனர். எனவே, கடவுள் படைத்த இவ்வுலகத்தில் மனிதர்கள் எந்த உரிமைகளில் இச்செயல்கள் அனைத்தையும் செய்கின்றனர் என்ற கேள்வியோடு இக்கவிதையை முடித்துள்ளார் கவிஞர்.

இன்றைய சூழல்
மனிதர்கள் இன்றும் சுற்றுப்புறச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பல செயல்களைச் செய்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். கடவுள் மனிதர்கள் வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொடுத்த இயற்கை நிறைந்த இவ்வுலகத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள மனிதர்கள் தவறிவிடுகின்றார்கள். பொதுவிடங்களில் குப்பைகளைப் போடுவது; எரிப்பது, காடுகளை அழிப்பது, பொதுவிடங்களில் சிகரெட் புகைப்பது போன்றச் செயல்களை மனிதர்கள் இன்னும் அதிகமாகச் செய்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க தவறவிடும் ஒவ்வொரு தருணங்களிலும் பூமியின் ஆயுள் குறைந்துக் கொண்டே இருக்கின்றது.