Showing posts with label சீ. அருண் கவிதைகள். Show all posts
Showing posts with label சீ. அருண் கவிதைகள். Show all posts

Tuesday, October 4, 2016

செம்பனை மரங்கள் - சீ. அருண்



கவிதைக் கரு

இந்தக் கவிதையின் மையம் நகர் சார்ந்த போலி வாழ்க்கையைக் குறிப்பிடுகிறது.


விமர்சனம்
செம்பனை மரங்களுடனும் இரப்பர் காடுகளுடனும் தமிழன் வாழ்ந்த   வாழ்கையைக் கவிஞர் கவிதையில் குறிப்பிடுகிறார். ஆரோக்கியம்   நிரம்பிய தமிழனின் வாழ்வு முறை இன்று நகரப்புறத்தில்  போலியாக   மின்னிக்கொண்டிருக்கிறதுவீடு, பணம் போன்ற ஆரோக்கியமற்ற   வாழ்க்கையைத் தமிழன் வாழ்வதாக கவிஞர் கூறுகிறார்.   அதுமட்டுமின்றி, “நாங்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தோம்என்பதை இன்றைய தலைமுறையினரிடம் சொல்லிதான் தெரிகின்றது; தமிழன்   வாழும் நகர் சார்ந்த வாழ்வு போலியானது.
இன்றைய சூழல்
இன்று தமிழனின் வாழ்வு போலியாகத்தான் உள்ளது. வீடு,   வேலை எனும் வட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.   தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்ததும், நாம் வீட்டினுள்ளே   அடைப்பட்டுவிட்டோம். ஆரோக்கியமான வாழ்க்கை   முறையை இழந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. வாழ்வு,   மொழி, அடையாளம் என ஒவ்வொன்றையும் தொலைத்துக்   கொண்டிருக்கின்றோம். ஆகவே, நகரப்புறத்தில்   வாழ்ந்தாலும், நாம் நம்முடைய அடையாளத்தை விட்டுக்   கொடுக்கக்கூடாது.