Showing posts with label ப.அ.சிவம் கவிதைகள். Show all posts
Showing posts with label ப.அ.சிவம் கவிதைகள். Show all posts

Tuesday, October 4, 2016

அப்புறப்படுத்தப்பட்ட தோட்டப்புறம் - ப.அ.சிவம்



கவிதைக் கரு
தோட்டப்புறங்கள் மலேசிய நிலப்படத்திலிருந்து காணாமல்   போய்க்கொண்டிருக்கிறது என்பதே இந்தக் கவிதையின்   கருவாகும்.

விமர்சனம்
தோட்டப்புற மக்களுக்கு வெளி உலகத்தைக்காட்டினால் ரப்பர்,   தேயிலை, செம்பனை உற்பத்தியில் பாதிப்பு வந்துவிடும் என்று   கருதிய பிரிட்டிசார் இவர்கள் தோட்டப்புறத்தை விட்டு வெளியேறாமல்   இருப்பதற்கான அடிப்படை வசதிகளை அவர்களுக்காகக்   கட்டமைத்துக்கொடுத்தனர். தோட்டப்புற மக்கள் தொழில் துறைக்கு   மாற நேர்ந்தது. இதனால் தோட்டப்புறக் கலாச்சாரம் கை   நழுவிப்போகும் அபாயத்தை எட்டியது. தோட்டப்புறச்சூழலின்   வாழ்வனுபவத்தைக் கவிஞர் இந்தக் கவிதையின் வழி பதிவுச் செய்கிறார்.

இன்றைய சூழல்
இன்றும் ஒரு சிலர் தோட்டப்புறங்களில் வாழ்ந்துக்கொண்டுதான்   இருக்கிறார்கள். இரப்பர் தோட்டத்தில் வேலை   செய்துக்கொண்டும் இருக்கிறார்கள். தோட்டப்புறங்களில்   தொழிற்சாலைகளை அமைப்பதனால், தோட்டப்புற வாழ் மக்கள்   அவ்விடத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்படுகிறது.   அதுமட்டுமின்றி, வேலையின் காரணமாகவும் ஒரு சிலர்   தோட்டப்புறத்திலிருந்து நகரப்புறத்திற்குச் செல்கிறார்கள்.   ஆகவே, தோட்டப்புற மக்கள் வாழ்ந்த இடத்தை விட்டு   கொடுக்காமலிருக்க துணிந்து போராட வேண்டும்.